ஒரு மாலை வாங்க கூட முடியவில்லை: பரவை முனியம்மா இறுதிச்சடங்கு குறித்துஒரு நடிகரின் நெகிழ்ச்சியான பதிவு

கிராமத்து பாடல்களை பாடும் பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா, நேற்று அதிகாலை காலமான நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஒருசிலர் மட்டுமே அவருடைய இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். பரவை முனியம்மா உடல்நலம் இல்லாதபோது அவருக்கு பெரும் உதவி செய்தவர் நடிகர் அபி சரவணன். இவர் பரவை முனியம்மாவின் இறுதி சடங்கில் கலந்து கொண்டது குறித்து தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியான ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.

அபி சரவணன் முக புத்தக பதிவில் இருந்து..

இன்று அதிகாலை இரண்டு மணியளவில் பரவை முனியம்மா வீட்டில் இருந்து ஒரு போன். இரண்டு மணிக்கு போன் என்பதால் பயத்துடன் எடுத்தபோது பரவை முனியம்மா அவர்களுக்கு மூச்சுத்திணறல் இருப்பதாக தகவல் வந்தது.

உடனடியாக அடுத்த போன் அம்மாவின் உயிர் பிரிந்தது என்று தகவல் வந்தது. அதிர்ந்துபோனேன்.. உடைந்து போனேன்.. அப்பத்தாவின் இறுதி மூச்சு பிரிந்ததை அறிந்து இறுக்கத்துடன் கிளம்பினேன் .

ஒரு மாலை கூட வழியில் வாங்க இயலாத கையாலாகாத பேரனாய் பரவை முனியம்மா பாட்டியை பார்க்க சென்றேன்.

சென்ற வழி எல்லாம் நினைவுகள் அபி அபி என்று அழைக்க வந்த ஆறுதலான வார்த்தைகள், அன்பான சிரிப்பு. இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவமனையில் வைத்திருந்த போது கூட அபி தைரியமாக கோர்ட்டுக்கு சென்று வா. அப்பாத்தா நான் இருக்கிறேன் எதுவானாலும் பார்க்கலாம் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று ஆறுதல் கொடுத்தார். இன்று உயிரோடு இல்லை.

இறுதி ஊர்வலம் இடுகாடு இறுதி மரியாதை இன்றுடன் எல்லாமே முடிந்தது.

கண்ணீருடன் பேரன் அபி சரவணன்’ என்று குறிப்பிட்டுளார்.

More News

டீ குடித்தால் கொரோனா போகுமா??? தொடரும் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி!!!

கொரோனா பரவத்தொடங்கியதில் இருந்து அதற்கான மருந்து பொருட்களைப் பற்றிய வதந்திகளும் அதிகமாகி கொண்டே வருகின்றன

பவன்கல்யாண் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்த முதல்வர்

ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீகாகுளம் என்ற பகுதியைச் சேர்ந்த 99 ஆந்திர மாநில மீனவர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கி தவிப்பதாகவும், அவர்களை

அமெரிக்கா; நடைமுறையில் இருக்கும் சமூக விலகல் ஏப்ரல் 30 வரை தொடரும்!!! ட்ரம்ப் அறிவிப்பு!!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக நடைமுறையில் உள்ள சமூக விலகல் ஏப்ரல் 30 வரை தொடரும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார் .

கொரோனா; ஆபத்தான நகரங்களில் ஒன்று சென்னை!!! இலங்கை சுகாதாரத்துறை அறிவிப்பு!!!

கொரோனா பரவலைத் தடுக்க இலங்கை அரசு பல தடுப்பு நடவடிக்ககைளை எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்புள்ள ஒரு கிராமத்தை முற்றிலும் தனிமைப்படுத்தி இரா

கொரோனா வைரஸ் இப்படித்தான் இருக்கும்!!! புகைப்படம் வெளியிட்ட இந்திய மருத்துவக் கழகம்!!!

கொரோனா பாதிப்பினால் உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இக்கட்டான சூழலைச் சந்தித்து வருகிறது.