close
Choose your channels

இராணுவ வீரர்களுடன் உற்சாக நடனம் ஆடிய பிரபல பாலிவுட் நடிகர்… வைரல் வீடியோ!

Friday, June 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அக்ஷய் குமார் நேற்று தனி விமானம் மூலம் காஷ்மீர் மாநிலம் சென்றுள்ளார். அங்கு எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இராணுவ வீரர்களுடன் உரையாடியதோடு அவர்களுடன் இணைந்து நடனம் ஆடி அவர்களை மகிழ்வித்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அக்ஷய் குமார் நேற்று காஷ்மீர் மாநிலம் பாண்டிபோரா பகுதியில் உள்ள குரோஸ் பள்ளத்தாக்குக்கு தனி விமானம் மூலம் சென்றுள்ளார். மேலும் அங்கு எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களோடு சந்தித்து உற்சாகமாக உரையாடி இருக்கிறார். மேலும் அவர்களுடன் இணைந்து நடனம் ஆடி அவர்களை மகிழ்வித்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

மேலும் நடிகர் அக்ஷய் குமார் குரோஸ் பள்ளத்தாக்கு பகுதியில் புதிய பள்ளி ஒன்றை கட்டுவதற்காக ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்வுகளின்போது இராணுவத் துறையை சார்ந்த மூத்த அதிகாரிகள் பலரும் இடம் பெற்றுள்ளனர். இதனால் நடிகர் அக்ஷய் குமாருக்கு அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.