10ஆம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய பிரபல நடிகர்: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Sunday,March 07 2021]

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ஒருவர் தனது மனைவியுடன் 10ஆம் ஆண்டு திருமண நாளை உலக அதிசயங்களில் ஒன்றான, காதல் சின்னமான தாஜ்மஹாலில் கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினர் என்பது தெரிந்ததே. கடந்த 2011 ஆம் ஆண்டு சினேகா ரெட்டி என்பவரைத் திருமணம் செய்துகொண்ட அல்லு அர்ஜுனுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் அல்லு அர்ஜுன் தனது 10ஆம் ஆண்டு திருமண நாளை அடுத்து மனைவி சினேகாவுடன் தாஜ்மகால் சென்று கொண்டாடியுள்ளார். அங்கு அவர் தனது மனைவியுடன் எடுத்த விதவிதமான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த ரொமான்ஸ் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 10ஆம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாட தங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த ஆக்ரா காவல் துறைக்கும் தனது நன்றி என்று கூறி அது குறித்த ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் இது குறிப்பிடத்தக்கது.

More News

இந்த கார் பாலாவுக்கும் சொந்தம்: இணையத்தில் வைரலாகும் 'குக் வித் கோமாளி' 'புகழ்' மீம்!

ஒரு நடிகர் கார் வாங்கினால் அதை அவரது ரசிகர்களே கொண்டாடுகிறார்கள் என்றால் அது குக் வித் கோமாளி புகழ் விஷயத்தில் தான் இருக்கும். சமீபத்தில் சொந்த கார் வாங்கிய புகழுக்கு

மகளிர் தினத்தில் சமந்தா எடுத்து கொண்ட சவால்: வைரலாகும் புகைப்படம்!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் மகளிர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவியும்

உடற்பயிற்சி செய்யும் நடிகை அஞ்சலியிடம் 'வலிமை' அப்டேட் கேட்ட ரசிகர்!

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைய உள்ள நிலையில் விரைவில் 'வலிமை' படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வர வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது

இசைப்புயலிடம் பாராட்டு வாங்கிய இளம் விண்வெளி புயல்… வைரல் டிவிட்!

ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து சுனிதா வில்லியம்ஸ், கல்பனா சாவ்லா போன்று விண்வெளித் துறையில் சாதனை படைக்க வேண்டும்

சூரியனோடு டைட்டானிக் போஸ்… ஆனால் சிங்கிள்? இளம் நடிகையின் வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை ராஷி கண்ணா.