close
Choose your channels

முதலமைச்சரின் மகளை திடீரென சந்தித்த நடிகர் சரத்குமார்.. என்ன காரணம்? 

Saturday, January 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்களின் மகள் கவிதாவை நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் சந்தித்துள்ளார். இருவரும் நீண்ட நேரம் தமிழக, தெலுங்கானா மற்றும் இந்திய அரசியல் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் மகளை சரத்குமார் சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சரத்குமார் கடந்த 1994 ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஆனால் ’நாட்டாமை’ படத்தின் பிரச்சனை காரணமாக அவர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவின் எம்பியாக இருந்த சரத்குமார், திடிரென அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் மனைவி ராதிகாவுடன் 2006ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். கடந்த 16 ஆண்டுகளாக தனிக்கட்சியை நடத்தி வரும் சரத்குமார் ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை என அறிவித்துள்ள சரத்குமார் தற்போது திடீரென தெலுங்கானா முதலமைச்சர் மகள் கவிதாவை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் சரத்குமாரின் திட்டம்? என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.