முதலமைச்சரின் மகளை திடீரென சந்தித்த நடிகர் சரத்குமார்.. என்ன காரணம்? 

  • IndiaGlitz, [Saturday,January 28 2023]

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்களின் மகள் கவிதாவை நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் சந்தித்துள்ளார். இருவரும் நீண்ட நேரம் தமிழக, தெலுங்கானா மற்றும் இந்திய அரசியல் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் மகளை சரத்குமார் சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சரத்குமார் கடந்த 1994 ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஆனால் ’நாட்டாமை’ படத்தின் பிரச்சனை காரணமாக அவர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவின் எம்பியாக இருந்த சரத்குமார், திடிரென அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் மனைவி ராதிகாவுடன் 2006ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். கடந்த 16 ஆண்டுகளாக தனிக்கட்சியை நடத்தி வரும் சரத்குமார் ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை என அறிவித்துள்ள சரத்குமார் தற்போது திடீரென தெலுங்கானா முதலமைச்சர் மகள் கவிதாவை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் சரத்குமாரின் திட்டம்? என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

அட்லியின் அடுத்த படத்தின் தயாரிப்பு நிறுவனம்.. ஹீரோ யார்?

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் அட்லி, முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

'ஏகே 62' இயக்குனர் திடீர் மாற்றமா? விக்னேஷ் சிவனுக்கு பதில் இவரா?

 அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் அனிருத் இசையில் லைகா தயாரிப்பில் உருவாகும்

'நீங்களா சொல்லிட்டிங்கன்னா விட்ருவேன்': நடன இயக்குனர் பிருந்தாவின் 'தக்ஸ்' டிரைலர்..!

பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கிய முதல் திரைப்படமான 'ஹேய் சினாமிகா' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் இயக்கத்தில் உருவாகி வரும் இரண்டாவது திரைப்படம் 'தக்ஸ்'.

தனுஷூடன் நேருக்கு நேர் மோத முடிவு செய்த செல்வராகவன்.. திரையுலகில் பரபரப்பு!

தனுஷூடன் நேருக்கு நேர் மோத முடிவு செய்துள்ள செல்வராகவனின் அறிவிப்பால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதுவரை நான் இதை செய்ததே இல்லை.. 'தங்கலான்' பாடல் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

இதுவரை இல்லாத அளவில் சர்வதேச தரத்தில் 'தங்கலான்' படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.