அஜித் உதவி செய்தும் வறுமையில் வாடும் தமிழ் நடிகர்!

  • IndiaGlitz, [Wednesday,May 05 2021]

தமிழ் நடிகர் ஒருவருக்கு தல அஜித் தனது சொந்த செலவில் போட்டோஷூட் எடுத்து பிரபலப்படுத்தியும் அந்த நடிகர் தற்போது வறுமையில் வாடி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ’வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் அப்புக்குட்டி. அதன் பிறகு ’அழகர்சாமியின் குதிரை’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதை வென்றார்.

அதன்பின்னர் ’வீரம்’ படத்தில் அஜித்துடன் அப்புக்குட்டி நடித்ததால் அவருடன் நெருக்கமானார். இந்த நட்பின் அடிப்படையில் அப்பு குட்டியை வைத்து அஜித் தனது சொந்த செலவில் போட்டோஷூட் எடுத்தார். இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது. இதனை அடுத்து அப்புக்குட்டிக்கு திரையுலகில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ’மாறா’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தாலும் கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அப்புக்குட்டி வாய்ப்புகள் கிடைக்காமல் உள்ளார். தற்போது அப்புகுட்டி பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதாகவும் அவர் தனது திரையுலக நண்பர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் தங்கியிருந்த அப்புகுட்டி தற்போது கோவூர் பகுதிக்கு தனது வீட்டை மாற்றி விட்டதாக தெரிகிறது. பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் அப்புக்குட்டிக்கு திரையுலக பிரபலங்கள் உதவி செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More News

பிக்பாஸ் ஷிவானிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு: டைட்டில் அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பல நடிகர் நடிகைகள் தற்போது திரையுலகில் வாய்ப்பு பெற்று பிஸியாக இருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்தியாவில் பொது ஊரடங்கு குறித்து பேச்சுவார்த்தையா? மத்திய அரசு சொல்வது என்ன?

இந்தியா முழுக்கவே தற்போது மருத்துவமனைகளில் படுக்கை இல்லை, ஆக்சிஜன் இல்லை

தென்னிந்தியாவில் பரவிய N440K வைரஸ் 15 மடங்கு உயிரிழப்பு ஏற்படுத்தக் கூடியது… அதிர்ச்சி தகவல்!

சீனாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவத் தொடங்கியது.

ஆக்சிஜன் பற்றாக்குறை: செங்கல்பட்டு மருத்துவமனையில் 11 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்!

செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நேற்றிரவு 11 நோயாளிகள் உயிரிழந்ததாகப்

நாம் தமிழரின் வாக்குகள் பிற கட்சிகளின் வெற்றி தோல்வியை  தீர்மானிக்கிறதா... ஓர் அலசல்...!

பெரும்பாலும் இளைஞர்கள், அரசியல் கட்சியினரிடத்தில் பணம் வாங்காதவர்கள், சாதி மதம் பார்க்காதவர்களின் ஓட்டுக்கள் நாம் தமிழருக்கே என்ற கருத்துக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது.