புரூஸ்லீ பாணியில் செம்ம ஆக்சன் செய்த அர்ஜுன்.. 62 வயதிலும் செம்ம ஆக்சன்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஆக்சன் கிங் அர்ஜுன் புரூஸ்லீ பாணியில் போஸ் கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து, 62 வயதிலும் அவரது ஆக்ஷன் ஸ்டைல் மாறவில்லை என்று கமெண்ட் குவிந்து வருகின்றன.
தமிழ் திரையுலகின் ஆக்ஷன் நடிகர்களில் ஒருவரான அர்ஜுன், தற்போது ’சீதா பயணம்’ என்ற முக்கிய கேரக்டரில் நடித்து இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இந்த படம் உருவாக்கி வருகிறது. அதே போல், ’தீயவர் குலைகள் நடுங்க’ என்ற படத்தில் அர்ஜுன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் புரூஸ்லீ நடித்த ’பி வாட்டர் மை ஃபிரண்ட்’ என்ற ஆல்பத்தை நினைவு கூறும் வகையில், அவரைப் போலவே போஸ் கொடுத்த வீடியோவை அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கல் குவிந்து வருகிறது. மேலும், இந்த வீடியோவில் ’லெஜெண்ட் புரூஸ் லீக்கு நன்றி’ என அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments