'தளபதி 64' படத்தின் இணைந்த 'கைதி' பட நடிகர்!

  • IndiaGlitz, [Saturday,November 30 2019]

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் சேதுபதி, மாளவிகா மேனன், ஆண்ட்ரியா, அந்தோனி வர்கீஸ், ஸ்ரீமான், சாந்தனு, சஞ்சீவ், ரம்யா, உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் நிலையில் தற்போது புதிதாக அர்ஜுன் தாஸ் என்ற நடிகர் ’தளபதி 64’ படத்தில் இணைந்துள்ளார்

அர்ஜுன் தாஸ் ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ திரைப்படத்தில் அன்பு என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அர்ஜூன் தாஸ் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே