close
Choose your channels

மரணமாஸ் 'மாஸ்டர்' டிரைலரை 6 முறை பார்த்தேன்: பிரபல நடிகர்

Monday, May 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதியே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக தேதி குறிப்பிடாமல் இந்த படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் திரையரங்கு திறக்க இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த படம் வரும் தீபாவளி அன்றுதான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் அர்ஜுன்தாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் டிரைலரை 6 முறை பார்த்து விட்டதாகவும் அந்த ட்ரெய்லர் மரணமாஸ் ஆக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். டிரைலர் ரிலீஸ் தேதி குறித்து தன்னிடம் பலர் கேட்டு வருவதாகவும் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டவுடன் டிரைலர் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் கூறினார். ’மாஸ்டர்’ ட்ரெய்லர் என்றைக்கு வெளியாகிறதோ அன்றைக்கு ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்

மேலும் ’மாஸ்டர்’ படத்தில் விஜய் அவர்களின் நடிப்பு மிகவும் ஆச்சரியத்தக்க வகையில் இருக்கும் என்றும் விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு சிறப்பான விருந்தாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ’மாஸ்டர்’ திரைப்படம் ஒடிடி பிளாட்பாரத்தில் முதலில் வெளிவர வாய்ப்பே இல்லை என்றும் திரையரங்குகளில் தான் முதலில் வெளிவரும் என்றும் திரையரங்குகளில் ஆடியன்ஸ் உடன் பார்க்கும் அந்த அனுபவத்திற்கு ஈடு இணை கிடையாது என்றும் ரசிகர்களுடன் இந்த படத்தை இணைந்து பார்க்க நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்

மேலும் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் அவர்களுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து கூறியபோது ’இவ்வளவு குறுகிய காலத்தில் தளபதியுடன் இணைந்து நடிப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றும் இது தனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று தான் கருதுவதாகவும் அவருடன் நடிப்பதே ஒரு மிகச்சிறந்த அனுபவம் என்றும் அந்த அனுபவத்தைக் கூற வார்த்தைகளே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் விஜய் அவர்கள் மிகவும் எளிமையானவர் என்றும் மிகப்பெரிய நடிகர் என்ற எண்ணமே அவருடைய மனதில் இல்லாமல் அவர் மிகவும் அமைதியாகவும் எளிமையாகவும் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.