எனக்கு 60 வயது இல்லை, காதலுக்கு வயது தடையில்லை: திருமணம் குறித்து ஆஷிஷ் வித்யார்த்தி..!

  • IndiaGlitz, [Sunday,May 28 2023]

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி 60 வயதில் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியான நிலையில் ’தனக்கு 60 வயது இல்லை என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி ரூபாலி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்றும் திருமண புகைப்படங்களும் வைரலானது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் 60 வயதில் திருமணம் தேவையா? என்று பலர் விமர்சனம் செய்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு 60 வயது இல்லை என்றும் 57 வயது தான் என்றும் கூறியுள்ளார்.

23 ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு திருமணம் நடைபெற்றது, ஆனால் எனக்கும் என்னுடைய மனைவிக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பிரிந்து விட்டோம், 55 வயதிலேயே எனக்கு ஒரு துணை வேண்டும் என்று முடிவு செய்து திருமணம் செய்ய முடிவு செய்தேன், அப்போதுதான் ரூபாலி சந்தித்த நிலையில் இருவரும் காதலித்தோம், தற்போது திருமணம் செய்து கொண்டோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் எனக்கு இப்போது வயது 57 தான் ஆகிறது, ஊடகங்களில் வெளியான தகவலின் படி எனக்கு 60 வயது இல்லை, காதலுக்கு வயது ஒரு தடை இல்லை, இருவரும் சந்தோஷமாக இணைந்து பயணம் செய்வோம்’ என்று கூறியுள்ளார்.