அதர்வாவின் அடுத்த படம்.. வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Saturday,February 11 2023]

நடிகர் அதர்வா நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மகன் அதர்வா, ‘பாணா காத்தாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் ’பரதேசி’ ’இரும்பு குதிரை’ ’ஈட்டி’ ’கணிதன்’ உள்பட பல படங்களில் நடித்த அவர் அவர் தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அதர்வா நடிக்கும் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’தணல்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரவீந்திர மாதவ் என்பவர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஜான் பீட்டர் என்பவர் தயாரிக்க உள்ளார்

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதர்வாவுடன் அஸ்வின், லாவண்யா உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'லால் சலாம்': செம அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'லால் சலாம்'

என் கணவர் வேறு யாருக்காவது புரபோஸ் செய்தால் எனக்கு ரொம்ப பிடிக்கும்: தமிழ் நடிகை..!

எனது கணவர் வேறு எந்த பெண்ணுக்காவது புரபோஸ் செய்தால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என தமிழ் நடிகை ஒருவர் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'துணிவு' படத்தை அடுத்து ஷாலினி அஜித் மகளுடன் பார்த்த படம்.. வைரல் வீடியோ

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் அந்த படத்தை தனது மகள் அனோஷ்கா மற்றும் தங்கை ஷாமிலியுடன் ஷாலினி அஜித் பார்த்தார் என்பதும்

விஜய்யின் 'லியோ': லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ் புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்துவரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கொடைக்கானலில் நடந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 

'லியோ' பாணியில் 'ஏகே62': சுபாஷ்கரனிடம் ஒப்புதல் வாங்கிவிட்டாரா மகிழ்திருமேனி?

விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தின் டைட்டிலை அறிவிக்கும் போது அட்டகாசமான புரோமோ வீடியோவுடன் அறிவிக்கப்பட்ட நிலையில் அதேபோல் 'ஏகே 62' படத்தின் டைட்டிலையும் புரோமோ வீடியோ உடன்