பிரபல தமிழ் ஹீரோவுக்கு கொரோனா தொற்று உறுதி: தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவிப்பு!

  • IndiaGlitz, [Sunday,April 18 2021]

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று கொரோனாவால் இந்தியாவில் 2.6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தனர் என்பது குறித்த செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழ் திரையுலகின் பிரபல ஹீரோக்களில் ஒருவரான அதர்வா முரளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் அதர்வா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா அறிகுறிகள் கடந்த சில நாட்களாக தென்பட்டதை அடுத்து பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனையில் எனக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நான் என்னுடைய வீட்டில் தனிமைப் படுத்தி கொண்டேன். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன். விரைவில் நான் குணம் அடைவேன் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

நடிகர் அதர்வா தற்போது ’தள்ளி போகாதே’, ‘குருதியாட்டம்’, ‘ஒத்தைக்கு ஒத்தை’, ‘ருக்குமணி வண்டி வருது’ ஆகிய படங்களில் அடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

யானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன்: விவேக் மறைவு குறித்து ஹர்பஜன்சிங்!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக் நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமான நிலையில் அவருக்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் பிரபலங்களும்,

ஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த விபரீதம்!

ஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு முகமெல்லாம் வீங்கி விபரீதம் ஏற்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது

இந்த 10 மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகம்...!சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்....!

இந்தியாவில் குறிப்பிட்ட எந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது என, சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

விஜயகாந்த் செய்த விஷயம்...!மகிழ்ச்சியின் உச்சத்தில் தேமுதிக வேட்பாளர்கள்...!

வேட்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க விஜயகாந்த், அந்த விஷயத்திற்கு சரி என்று சொல்லியுள்ளதால் அவர்கள் நெகிழ்ச்சியில் உள்ளனர்.

30 லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு… அதிர்ச்சி ரிப்போர்ட்!

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் உருவான கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுவதும் பெருந்தொற்றாக மாறி தற்போது உலகையே ஸ்தம்பிக்க வைத்து உள்ளது.