அந்த பொண்ணுக்கு 23 வயது இல்ல, மலேசியாவும் இல்ல.. 2ஆம் திருமணம் குறித்து மனம் திறந்த பப்லு!

  • IndiaGlitz, [Saturday,October 22 2022]

நடிகர் பப்லுவுக்கு 55 வயது ஆகியிருக்கும் நிலையில் அவர் 23 வயது இளம் பெண்ணை திருமணம் செய்ய போகிறார் என்றும், அவர் திருமணம் செய்ய போகும் பெண் மலேசியாவை சேர்ந்தவர் என்றும் செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த செய்திக்கு ‘பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்’ என்ற பிக்பாஸ் நடிகை காஜல் பசுபதி தெரிவித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் பப்லு மனம் திறந்து சில விஷயங்களை தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளில் வெளியானது போல் அந்த பெண்ணுக்கு 23 வயது அல்ல என்றும், 24 வயது என்றும் கூறினார். மேலும் அவர் மலேசியாவை சேர்ந்தவர் கிடையாது என்றும் அவர் ஆந்திரா தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கு பெண் என்றும் கூறினார்.

மேலும் எனக்கு வயது 55 மற்றும் அந்த பெண்ணுக்கு வயது 24 என்பதால் அந்த பெண் திருமணம் செய்ய தயாராக இருந்தாலும் நான் தான் யோசிக்கின்றேன் என்றும் அந்த பெண்ணுக்கு நான் நிறைய டைம் கொடுத்து யோசிக்க கூறி இருக்கிறேன் என்றும் ஆனால் அவர் என்னை திருமணம் செய்வதில் உறுதியாக இருக்கிறார் என்றும் அந்த பெண்ணின் குடும்பத்தினர்களும் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் யாருக்கு எந்த வயதில் காதல் வரும் என்பதை யாராலும் முடிவு செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்

இதனை அடுத்து விரைவில் 24 வயது பெண்ணை நடிகர் பப்லு திருமணம் செய்ய போவது உறுதி என்பதை இந்த பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.

More News

பிரின்ஸஸ்-க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய 'பிரின்ஸ்' நாயகன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இன்று அவரது பிரின்ஸஸ்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.

எவனாச்சும் முகத்தை பாக்குறானா? ஷிவானியின் ஹாட் போட்டோஷூட்டிற்கு குவியும் கமெண்ட்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் சினிமா நடிகையுமான ஷிவானி நாராயணன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த

'சூர்யா 42' படத்தின் சூப்பர் அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் நடைபெற்றது என்பதும் இதனை அடுத்து படக்குழுவினர் தீபாவளி கொண்டாடுவதற்கான

தனுஷின் அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுகிறதா?

தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தீபாவளி வின்னர் யார்? பிரின்ஸ் மற்றும் 'சர்தார்' முதல் நாள் வசூல் தகவல்கள்!

இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் கமல், ரஜினி, அஜித், விஜய், சூர்யா ஆகிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகாத நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி படங்கள் வெளியாகியுள்ளன