லாக்டவுன் வருமா? வராதா? பதில் சொல்லுங்க ஆபீஸர்ஸ்: தமிழ் நடிகர் டுவிட்!

  • IndiaGlitz, [Thursday,April 29 2021]

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பாலசரவணன் ’லாக்டவுன் வருமா? வராதா? பதில் சொல்லு ஆபீசர்ஸ்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இது குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் காமெடி நடிகர் பாலசரவணன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: யாரைப் பார்த்தாலும் முழு ஊரடங்கு வரப்போகிறது. இல்ல அதுக்கலாம் வாய்ப்பேயில்லனு சொல்றாங்க. அத யோசிச்சே பல பேரு மன உளைச்சல்ல இருக்கிறது அவுங்க கிட்ட பேசும் போது தெரியுது. கேள்வி என்னனா முழு லாக்டவுன் வருமா வராதா? குறஞ்சபட்சம் இந்த பயத்துக்காவது பதில் சொல்லுங்க ஆபிஸர்ஸ்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 

More News

திருப்பதியில் கொரோனா தொற்று உறுதியான 1,000 பேர் மாயம்… அதிர்ச்சி தகவல்!

கொரோனா நோய்த்தொற்று சற்றுத் தணிந்து இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அனைத்துக் கோவில்களிலும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கொரோனா வார்டில் சி.ஏ. தேர்வுக்கு படிக்கும் இளைஞர்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் தன்னுடைய டிவிட்டரில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு உள்ளார்.

கொரோனா தடுப்பூசி விலை குறைப்பு… அறிவிப்பு வெளியிட்ட சீரம்!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

சர்ச்சை கேள்விக்கு யுவன்ஷங்கர் ராஜாவின் சாந்தமான பதில்!

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அவர்கள் தனது சமூக வலைதளத்தில் இஸ்லாம் மதம் குறித்து செய்த பதிவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுப்பிய நிலையில்

3000 கொரோனா நோயாளிகள் தலைமறைவு, செல்போனும் சுவிட்ச் ஆப்: பெரும் பரபரப்பு

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சுமார் 3000 பேர் திடீரென தலைமறைவாகிவிட்டதாகவும் அவர்கள் தங்களுடைய வீடுகளையும் காலி செய்துவிட்டு செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டதாகவும்