கொரோனாவுக்கு எதிரான போர்: ரூ.1.25 கோடி கொடுத்த பிரபல நடிகர்

கொரோனாவுக்கு எதிராக நாடே போராடி கொண்டிருக்கும் நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக திரையுலகை சேர்ந்த பலர் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் அரசுக்கு உதவி செய்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக தெலுங்கு திரையுலக முன்னணி நடிகர்கள் பலர் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் மகனுமாகிய என்.டி.ஆர் பாலகிருஷ்ணா கொரோனா தடுப்பு நிதியாக ரூ.1.25 கோடி நிதியுதவி செய்துள்ளார். இதில் ஆந்திர மாநில முதல்வர் நிவாரண நிதியாக ரூ.50 லட்சம், தெலுங்கானா மாநில முதல்வர் நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் மற்றும் ரூ.25 லட்சம் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நிதியாக தெலுங்கு நடிகர்கள் பலர் நிதியுதவி செய்து வரும் நிலையில் தமிழ் நடிகர்களும் விரைவில் நிதியுதவி குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நான் கொரோனாவை விட மோசமானவன்: போலீசிடம் வாக்குவாதம் செய்த வாலிபர் கைது

சமீபத்தில் சிவகங்கையை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசாரிடம் 'கொரோனாவை என் கண் முன் காட்டு, முதலமைச்சரை என் முன்னால் வந்து நின்று நிற்கச்சொல்' என வீராவேசம்

கொரோனாவுக்கு பழந்தமிழ் வைத்தியம்!!! வாட்ஸ் அப்பில் பரவிவரும் தகவலை நம்பலாமா???

கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப் முதற்கொண்டு அனைத்து சமூக வலைத் தளங்களிலும் கொரோனாவுக்கு மருந்து என்ற பெயரில், சில புத்தகத் தாள்கள் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது

அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா: ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றினாலும் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி விட்டது. உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி இருந்தாலும்

உங்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா இருக்கிறதா??? தெரிந்துகொள்ள  இந்த செயலியை பயன்படுத்துங்கள்!!!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது

வீடு தேடி வரும் காய்கறிகள்: திருப்பூர், நெல்லை போல் சென்னையில் கிடைக்குமா?

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மளிகை மற்றும் காய்கறிகள் வாங்குவதற்கு மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்