டிஸ்சார்ஜ் ஆனார் போண்டாமணி.. ரஜினி,அஜித், விஜய்க்கு வேண்டுகோள்!

  • IndiaGlitz, [Saturday,October 01 2022]

காமெடி நடிகர் போண்டாமணி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போண்டாமணி செய்தியாளர்களை சந்தித்தபோது முன்னணி நடிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர் போண்டாமணி என்பதும் இவர் பாக்யராஜ் இயக்கிய ’பவுனு பவுனுதான்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ரஜினி, விஜய், அஜித் உள்பட பல முன்னணி பிரபலங்களின் படங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போண்டாமணிக்கு தேவையான சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உத்தரவிட்டார் என்பதும் அவருடைய மருத்துவச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி விஜய் சேதுபதி, தனுஷ் உள்பட பல பிரபலங்கள் போண்டாமணிக்கு நிதி உதவி செய்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ள போண்டாமணி, ‘நான் ரஜினி, அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளேன் என்றும், விரைவில் எனக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் சினிமாத்துறையினர் உதவி செய்வார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More News

தமிழ் சினிமாவின் வரலாற்று சாதனை: 'பொன்னியின் செல்வன்' முதல் நாள் வசூல் அறிவிப்பு!

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்றைய முதல் நாள் வசூல் தமிழ் சினிமாவின்

ராமர் பாலத்தை காப்பாத்த நமக்கு வெறும் 3 நாள் தான் இருக்கு.. அக்சயகுமாரின் 'ராம் சேது' டீசர்

அக்ஷய் குமார் நடித்த 'ராம் சேது' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தமிழ் டீசர் தற்போது வெளியாகி

விஜய், அஜித் படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்த 'பொன்னியின் செல்வன்': ஆச்சரிய தகவல்!

2022 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகிற்கு நல்ல ஆண்டு என்றுதான் கூறவேண்டும். இந்த ஆண்டு வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பதும் தமிழ் சினிமாவின் பல

விஜய் தேவரகொண்டாவுடன் காதலா? க்யூட் பதிலளித்த ராஷ்மிகா மந்தனா!

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, விஜய்தேவரகொண்டாவை காதலிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில்

'பொன்னியின் செல்வன்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? சாதனை வசூல்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு சமூக வலைதளங்கள்