நகைச்சுவை நடிகர் சாம்ஸ்-க்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? வைரலாகும் புகைப்படங்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சாம்ஸ் குடும்பத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் சாம்ஸ் கடந்த 2000 ஆண்டிலிருந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவரது நடிப்புக்கு என ரசிகர்கள் கூட்டம் ஒன்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கிரேசி மோகன் நாடக குழுவில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் என்பதால் இவரது நகைச்சுவையில் ஒரு எதார்த்தம் இருக்கும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் நிலையில் இவரது மகன் யோஹன் என்பவர் தற்போது சினிமாவில் நடிக்க தயாராகிவிட்டார். இதற்காக அவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்று வருவதாகவும் இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சாம்ஸ் குடும்ப புகைப்படத்தில் அவரது மனைவி, மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் சாம்ஸ்-க்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.