close
Choose your channels

ஜிவி பிரகாஷின் சர்வதேச ஆல்பத்தில் தனுஷ்!

Monday, September 7, 2020 • தமிழ் Comments

கோலிவுட் திரையுலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என்ற இரண்டு துறையிலும் பிசியாக இருந்து வரும் ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் தயாராகி கொண்டு வருகிறது என்றும், இது குறித்து ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் ஏற்கனவே தெரிவித்தார் என்பதையும் பார்த்தோம். தன்னுடைய முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் தனது நீண்ட நாள் கனவு நனவாகப் போகிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் ஜிவி பிரகாஷ் மற்றும் கனடா நாட்டின் பாடகி ஜூலியா கர்தா இணைந்து உருவாக்கிய இந்த ஆல்பத்தின் பெயர் ’கோல்ட் நைட்ஸ்’ என்றும், இந்த ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆல்பத்தை வெளியிடுவது நடிகர் தனுஷ் என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் இந்த ஆல்பத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடவுள்ளதை அடுத்து இந்த ஆல்பத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Get Breaking News Alerts From IndiaGlitz