சென்னை அப்பல்லோவில் பிரபல நடிகர் அனுமதி.. நேரில் நலம் விசாரித்த பூச்சிமுருகன்

  • IndiaGlitz, [Thursday,January 26 2023]

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை நேரில் சந்தித்து நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் நலம் விசாரித்தார்.

தமிழ் திரை உலகின் நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்தவர் நடிகர் மனோபாலா. அதுமட்டுமின்றி இவர் சில படங்களை தயாரித்து உள்ளார் என்பதும் சில படங்களை இயக்கியுள்ளார் என்றும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மனோபாலா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அதன் பிறகு தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் மனோபாலாவை நேரில் சென்று நடிகர் சங்க தலைவர் பூச்சி முருகன் நலம் விசாரித்தார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் நடிகர் மனோபாலா விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

More News

ரூ.25 கோடி லாட்டரியால் நிம்மதி இழந்த இளைஞர்.. திடீரென ஏற்பட்ட திருப்பம்!

 ரூபாய் 25 கோடி லாட்டரி சீட்டில் பரிசு கிடைத்த கேரளா இளைஞர் ஒருவர் தனக்கு நிம்மதியே இல்லாமல் போய்விட்டது என்று கூறி இருந்த நிலையில் தற்போது அவருடைய வாழ்க்கையில் திடீரென திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

போற உயிரு அவனுங்க கிட்ட போராடியே போகட்டும் சார்.! யோகி பாபுவின் 'பொம்மை நாயகி' ட்ரைலர்!

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த  'பொம்மை நாயகி' என்ற படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

'தர்பார்' நடிகரின் மகள் திருமணம்.. ரூ.100 கோடிக்கு குவிந்த பரிசுகள்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'தர்பார்' படத்தில் நடித்த நடிகரின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் இந்த திருமணத்திற்கு சுமார் ரூ.100 கோடி

உங்கள் வழியில் செல்லுங்கள் சகோதரரே..! பிரபல நடிகருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் பிரபல நடிகருக்கு 'உங்கள் வழியில் செல்லுங்கள் சகோதரரே' என வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரபல தமிழ் பின்னணி பாடகிக்கு பத்ம பூஷன் விருது.. குவியும் வாழ்த்துக்கள்!

இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் பிரபல பின்னணி பாடகிக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.