ரெட்ரோ விழாவில் அவதூறு பேச்சு? காவல்துறையில் புகார்.. பிரபல நடிகர் விளக்கம்!


Send us your feedback to audioarticles@vaarta.com


புகழ்பெற்ற நடிகர் ஒருவர் சமீபத்தில் 'ரெட்ரோ திரைப்பட விழாவில்' நிகழ்த்திய உரையைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன. இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "நான் பேசிய சில கருத்துகள் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக எனது கவனத்திற்கு வந்தது. எனவே, அதன் மீது விளக்கம் அளிக்க விரும்புகிறேன்," எனத் தெரிவித்துள்ளார். அந்த பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மேலும் கூறியதாவது:
"எந்தவொரு சமூகத்தையும் புண்படுத்தும் நோக்கமோ, குறிப்பாக பட்டியலின பழங்குடியினரை குறைவாகப் பார்ப்பதோ எனக்கு இல்லை. அவர்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. இந்தியா என்பது ஒரு ஒற்றுமை கொண்ட நாடு, இதைத்தான் என் உரையில் வலியுறுத்தியிருந்தேன்."
"‘டிரைப்’ என்ற சொல், பழங்கால இனக்குழுக்களை குறிக்கும் விதமாகவே பேசப்பட்டது. தற்போதைய 'பட்டியலின பழங்குடியினர்' என்ற வரையறைக்கு அது பொருந்தாது. யாராவது தவறாகப் புரிந்திருந்தால், அல்லது மனதிற்கு புண்பட்டிருந்தால், அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்."
"என் நோக்கம் எப்போதும் அமைதி, ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் பற்றியதே. என் தளத்தை நான் அந்த நோக்கத்திற்காகவே பயன்படுத்துவேன்," எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதற்கிடையில், ஹைதராபாத் எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் அவரது பேச்சுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதால் இந்த புகார் குறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது.
To my dear brothers ❤️ pic.twitter.com/QBGQGOjJBL
— Vijay Deverakonda (@TheDeverakonda) May 3, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments