நடிகர் கவுண்டமணி வீட்டில் நிகழ்ந்த சோகம்.. திரையுலகினர் இரங்கல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
தமிழ் திரை உலகின் பல ஆண்டுகளாக நகைச்சுவை நடிகராகவும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர் கவுண்டமணி. தற்போது வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் நடிக்காமல் உள்ளார் என்பதும் இருப்பினும் ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்று அவர் நடித்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 67.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணி இல்லத்தில் இறுதிச்சடங்குக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளதாகவும், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்து வருவதாகவும் தகவல் வழியாக உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments