போலீசிடம் சிக்கிய பின் மக்களுக்கு அறிவுரை கூறிய நடிகர் ஜெய்

  • IndiaGlitz, [Wednesday,June 27 2018]

'சென்னை 600018, எங்கேயும் எப்போது, ராஜா ராணி, பலூன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ஜெய். இவர் நேற்றிரவு அதிக ஒலி எழுப்பிய கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது சென்னை நுங்கம்பாக்கம் அருகே போக்குவரத்து போலீசாரிடம் பிடிபட்டார்.

அதிக ஒலி எழுப்பும் காரை பயன்படுத்த கூடாது என்றும் மீறினால் கார் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் ஜெய்யிடம் கூறினார். இதனையடுத்து போலீசாரிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் ஜெய், இனி அதிக ஒலி எழுப்பும் காரை பயன்படுத்த மாட்டேன் என்று உறுதி அளித்தார். பின்னர் பொதுமக்களுக்கு ஒரு அறிவுரையும் கூறினார். அவர் கூறியதாவ்து:

அதிக ஒலி எழுப்பும் காரை யாரும் பயன்படுத்த வேண்டாம். அதிக ஒலி எழுப்பும் காரால் சாலை அருகில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்றும் எனவே சுற்றுச்சூழலை பாதிக்கும் அதிக ஒலி எழுப்பும் காரை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஜெய் வேண்டுகோள் விடுத்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More News

ஊட்டி விடும் பிரச்சனை: இரண்டாக பிளவுபட்ட பிக்பாஸ் பெண்கள் அணி

பிக்பாஸ் வீட்டில் வெங்காயத்தை வைத்தே ஒரு வாரம் ஓட்டிவிட்ட நிலையில் இந்த வாரம் எஜமானர்-வேலைக்காரி டாஸ்க்கை வைத்தே ஓட்டிவிடுவார்கள் போல் தெரிகிறது.

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு! தினகரன் உற்சாகம்

18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. இந்த வழக்கை விசாரணை செய்த இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் யார் யார்? முழு தகவல்கள்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடித்து வந்த 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் வரும் வினாயகர் சதூர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளது.

விஜய்சேதுபதியுடன் மீண்டும் நயன்தாரா: பர்ஸ்ட்லுக் வெளியீடு

விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரெளடிதான்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, திரையில் இந்த ஜோடியின் கெமிக்ஸ்ட்ரி அனைவராலும் ரசிக்கப்பட்டது.

பண்ண மாட்டேன், முடியாது: ஷாரிக்குடன் மல்லுகட்டும் மும்தாஜ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது நாளான நேற்று எஜமானர்-வேலைக்காரி என்ற டாஸ்க் லக்சரி பட்ஜெட்டுக்காக கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் ஆண்கள் எஜமானர்களாகவும், பெண்கள் வேலைக்காரிகளாகவும் நடிக்கவேண்டும்.