நடிகர் ஜெய்க்கு திடீர் திருமணமா? மணமகள் இந்த பிரபல நடிகையா? திருமண புகைப்படம் வைரல்..!

  • IndiaGlitz, [Tuesday,April 30 2024]

நடிகர் ஜெய் திடீரென தனக்கு திருமணமான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவர் திருமணம் செய்து கொண்டது பிரபல நடிகை என்று கூறப்பட்டு வருகிறது.

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகரான ஜெய், விஜய் நடித்த ‘பகவதி’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகிய அதன் பின்னர் ’சென்னை 600028’ ’சுப்ரமணியபுரம்’ ’சரோஜா’ ’வாமனன்’ ’கோவா’ ’எங்கேயும் எப்போதும்’ ’வடகறி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு கூட அவர் மூன்று படங்களில் நடித்தார் என்பதும் தற்போது அவர் ’கருப்பர் நகரம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜெய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென நடிகை பிரக்யா நக்ராவுடன் திருமணம் செய்த புகைப்படத்தை பதிவு செய்து, அந்த பதிவில் ’புதிய வாழ்க்கை ஆரம்பம் கடவுள் ஆசியுடன்’ என்று தெரிவித்துள்ளார். நடிகை பிரக்யா, ‘வரலாறு முக்கியம்’ ‘என்4’உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

ஜெய் பதிவு செய்த இந்த திருமண புகைப்படத்தில் மணமக்கள் இருவரும் தங்கள் கையில் பாஸ்போர்ட் மற்றும் விசாவுடன் இருப்பதை பார்க்கும்போது இருவரும் ஹனிமூனுக்கு வெளிநாடு போகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது

ஆனால் இது ஒரு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் பின்பக்கம் உள்ள கண்ணாடியில் கேமரா நன்றாக தெரிகிறது என்றும் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இதே போல் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னால் பாலாஜி முருகதாஸ் திருமண புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் மறுநாள் தான் அது ஒரு விளம்பர படத்திற்கான போட்டோஷூட் என்பது தெரிய வந்தது. அதேபோல் இந்த புகைப்படம் குறித்து நாளை செய்தி வரலாம்.

More News

'கில்லி' போல் ரீரிலீஸ் ஆகும் 'மெட்டி ஒலி' சீரியல்.. சூப்பர் அறிவிப்பு..!

2024 ஆம் ஆண்டை ரீரிலீஸ் ஆண்டு என்று சொல்லலாம் என்பதும் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து பல திரைப்படங்கள் ரீரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்காக ஜீ தமிழ் தொடரில் இருந்து விலகிய நடிகர்.. இவருக்கு பதில் இவர் யார்?

குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த நிலையில் இதில் குக்காக கலந்து கொண்ட சீரியல் நடிகர் ஒருவர் ஜீ தமிழ் சேனலில் நடித்துக் கொண்டிருந்த

ஸ்ருதிஹாசனுடன் உண்மையிலேயே பிரேக் அப்? சாந்தனு கூறிய அதிர்ச்சி தகவல் என்ன தெரியுமா?

நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த சில ஆண்டுகளாக சாந்தனு என்பவரை காதலித்து கொண்டிருந்த நிலையில் திடீரென இந்த காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும்

கல்யாணத்தை மறைத்த தியாகராஜன்.. பிரஷாந்தை பார்த்து வியந்த சத்யராஜ்!! தியாகராஜன் லைஃப் ஸ்டோரி

நடிகர் தியாகராஜன் அவர்கள் இந்தியக்ளிட்ஸ் அனுப்பிய பேட்டியில், நான் திரைத்துறைக்கு வந்த போது, எனது மனைவி சொன்னது: "நீங்கள் சினிமா ஸ்டார் என்று தெரிந்து விட்டால், என் பிரைவேசி போய்விடும்.

ஒரே மாதத்தில் கணவருடன் விவாகரத்தா? நொந்து நூலான இந்திரஜா ரோபோ சங்கர்..!

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் ஆகி ஒரே மாதம் மட்டுமே ஆகி உள்ள நிலையில் அதற்குள் விவாகரத்து என சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பி விடுவதை அடுத்து இந்திரஜாவும்