close
Choose your channels

சுந்தர் சிக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ: சைக்கோ கில்லர் வேடமா?

Friday, November 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல ஹீரோ ஒருவர் சுந்தர் சி நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் அந்த படத்தில் அவர் சைக்கோ கில்லர் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகில் விஜய் நடித்த ’பகவதி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெய். அதன்பின்னர் இவர் ’எங்கேயும் எப்போது’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார் என்பதும், தற்போது அவர் ஐந்து திரைப்படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்குனர் பத்ரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஜெய் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதை 80களில் நடப்பதாகவும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் சைக்கோ கில்லருக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்றும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் சுந்தர் சியும், சைக்கோ கில்லர் கேரக்டரில் ஜெய்யும் நடிக்கவுள்ளதாகவும் இயக்குனர் பத்ரி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமிழ் திரையுலகின் வினய் உள்பட பல ஹீரோக்கள் வில்லனாக மாறி உள்ள நிலையில் தற்போது அந்த வரிசையில் ஜெய்யும் வில்லனாக மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.