ஆரம்பமே அட்டகாசம்: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜீவா நன்றி

  • IndiaGlitz, [Friday,April 21 2017]

'லொள்ளுசபா' ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'ஆரம்பமே அட்டகாசம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு சற்று முன்னர் நடைபெற்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வீட்டில் இந்த படத்தின் பாடல்களை வெளியிட்டார். 'ஆரம்பமே அட்டகாசம்' படத்தின் பாடல்களை வெளியிட்ட சூப்பர் ஸ்டாருக்கு ஜீவா தனது நன்றியை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

'தலைவரின் ஆசியுடன் 'ஆரம்பமே அட்டகாசம்' படத்தின் இசை இன்று முதல் வெளியாகியுள்ளதாகவும், இந்த படத்தின் பாடல்களை வெளியிட்ட அன்பு தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜீவா, சங்கீதா செளஹான், பாண்டியராஜன், வையாபுரி உள்பட பலர் நடித்துள்ளனர்.

More News

அப்பல்லோவில் ஜெ-சசி பேசிய வீடியோவை வெளியிடுவேன். திவாகரன் மகன் மிரட்டல்

அதிமுக கட்சியையும் கட்சியின் சின்னமான இரட்டை இலையையும், ஆட்சியையும் காப்பாற்றுவதற்காக சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக மூத்த அமைச்சர்கள் சமீபத்தில் முடிவெடுத்தனர்...

வெளிநாட்டு பயணத்திற்கு அனுமதி கேட்டு குஷ்பு நீதிமன்றத்தில் மனு

பிரபல நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு மதுரை ஐகோர்ட்டில் தனக்கு வெளிநாட்டுக்கு செல்ல அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது...

'துள்ளாத மனமும் துள்ளும்' டவுசர் பாண்டி குடும்பத்திற்கு விஜய் உதவி

விஜய், சிம்ரன் நடித்த 'துள்ளாத மனமும் துள்ளும்' திரைப்படம் விஜய்யின் வெற்றி படங்களில் ஒன்று. இன்று பிரபல இயக்குனராக இருக்கும் எழில் இயக்கிய முதல் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது...

நயன்தாராவுடன் சரவணா ஸ்டோர் சரவணன் நடிப்பது உண்மையா? திரையுலக பிரபலம் விளக்கம்

கடந்த சில நாட்களாக கோலிவுட் திரையுலகிலும், செய்தி இணையதளங்களிலும் பரபரப்பாக வெளிவந்த செய்தி சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அவர்கள் திரைப்படங்களில் நடிக்கவுள்ளார் என்பதும் அவரது முதல் படத்தில் நயன்தாரா நடிப்பார் என்பதும்தான்...