'மரம்' கருணாநிதிக்கு நிதியுதவி வழங்கிய நடிகர் கார்த்தி

  • IndiaGlitz, [Sunday,April 14 2019]

சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேல் மரங்கள் நட்டு தனது பெயருக்கு முன்னால் 'மரம்' என்ற அடைமொழியை பெற்றுள்ள 55 வயது கருணாநிதி என்பவரை அவரது சேவையை பாராட்டி நடிகர் கார்த்தி ரூ.50 ஆயிரம் நிதியுதவி செய்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி சங்கீதமங்கலம் என்ற கிராமத்தில் பிறந்தவர் கருணாநிதி. சிறு வயதில் இருந்தே மரங்களின் மீதும் இயற்கையின் மீது பேரன்பு கொண்ட இவருக்கு சிறுவயதில் பசுமை போர்த்திய ஊராக இருந்த தன் ஊர் எல்லாம் மாறி மரங்களே இல்லாத சூழ்நிலை இருக்கிறதே என்று மனம் வெறுப்பினார். ஏன் நாம் மரக்கன்றுகளை போகும் இடங்கள் எல்லாம் நடக்கூடாது என்று யோசித்தவர்தான். இன்று 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார். ஆதலால் இவர் பெயரோடு மரம் என்ற சொல்லும் இணைந்து மரம் கருணாநிதி என்றே அழைக்கப்படுகிறார்.

55 வயதான மரம் கருணாநிதிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். எப்போதும் இயற்கையை பற்றிதான் கவலை. எங்கே சென்றாலும், யார் வீட்டுக்கு சென்றாலும் மரக்கன்றுகள் கொடுப்பது இவரது வழக்கம். இதுவரை இவர் மற்றவர்களுக்கு வழங்கிய மரக்கன்றுகளுக்கோ அல்லது இவரிடம் இருந்து மற்றவர்கள் வாங்கிச் சென்ற மரக்கன்றுகளுக்கோ இவர் பணம் வாங்கியதில்லை. விசேஷ நாட்களில் வேலைக்கு செல்வது, தன்னுடைய சம்பளத்தில் இருந்து மரக்கன்றுகள் வாங்குவது இப்படிதான் இவர் மரக்கன்றுகளை இலவசமாக அளித்தும், நட்டும் வருகிறார். அவர் இயற்கை மீது கொண்ட பற்றால் தன்னுடைய சம்பளத்தை செலவு செய்வதால் பல நேரங்களில் பொருளாதார நெருக்கடியும் ஏற்படுகிறது. ஆனால் எந்த நிலை என்றாலும் மரக்கன்றுகள் வழங்குவதையும் நடுவதையும் இவர் கைவிடுவதேயில்லை.

இவரது சேவையை பாராட்டியும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் உழவன் பவுண்டேசன் சார்பில் அதன் நிறுவனர் நடிகர் கார்த்தி ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி கெளரவித்துள்ளார்.
 

More News

'மக்கள் செல்வி' வரலட்சுமியின் அட்டகாசமான அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக்-டைட்டில்

நடிகை வரலட்சுமி கடந்த ஆண்டு விஜய், தனுஷ், விஷால் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நிலையில் தற்போது அவர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களை ரிலீஸ் செய்து வரும் நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. கடந்த ஆண்டு 'பேட்ட', 96' உள்பட அவர் நடித்த 7 படங்கள் வெளியானது

ஜூனில் வெளியாகிறது சுந்தர் சியின் அடுத்த படம்

கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிப்பதை கைவிட்டு மீண்டும் இயக்கத்தில் தீவிர கவனம் செலுத்தி வரும் சுந்தர் சி, தற்போது விஷால் நடித்து வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்

அரசியல்ல களவாணித்தனம் தான் கைகொடுக்கும்: 'களவாணி 2' டிரைலர் விமர்சனம்

விமல், ஓவியா நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கிய 'களவாணி' திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

தேர்தல் அதிகாரி டுவீட்டை மேற்கோள் காட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'சர்கார்' திரைப்படம் வெளியானவுடன் தான் 49P என்பதே பொதுமக்களில் பலருக்கு தெரிய வந்தது.