கார்த்தியின் 'கைதி' திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்!

  • IndiaGlitz, [Saturday,August 01 2020]

கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளியன்று வெளியான திரைப்படம் ’கைதி’. இந்த படம் வெளியான அதே தினத்தில் தான் தளபதி விஜய்யின் ‘பிகில்’ திரைப்படமும் வெளிவந்தது. பிகில் படத்துடன் வெளிவந்தாலும் ’கைதி’ திரைப்படம் முதல் நான்கு நாட்களில் சுமாரான வசூலை தந்தது. ஆனால், ஐந்தாவது நாளில் இருந்து பிக்கப் ஆகி மிகப்பெரிய வசூலை கொடுத்தது. மேலும் திரையரங்குகளில் காட்சிகளும் ஐந்தாவது நாளுக்கு பின் அதிகமானதால் தயாரிப்பாளருக்கு மட்டுமன்றி திரையரங்கு உரிமையாளர்கள் வினியோகஸ்தர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் நல்ல லாபத்தை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்தின் மாபெரும் வெற்றியால்தான் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் இயக்குனர் வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்ப்பிடத்தக்கது. மேலும் ‘கைதி’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யவிருப்பதாகவும், கார்த்தி வேடத்தில் அஜய்தேவ்கான் நடிக்கவிருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. .

இந்த நிலையில் தற்போது ‘கைதி’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய கெளரவம் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த படம் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கார்த்தி, லோகேஷ் கனகராஜ், எஸ்.ஆர்.பிரபு ஆகியோர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

More News

தொழிலதிபருடன் லிவிங்டுகெதர் ரிலேஷனா? பிக்பாஸ் ஜூலி விளக்கம்

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி, 'ஜல்லிக்கட்டு' போராட்டத்தின்போது ஒட்டுமொத்த தமிழர்களிடையே பெற்ற பெரும் புகழை இழந்தார் என்றே சொல்ல வேண்டும்

17 மாவட்டங்களில் ரூ.247 கோடி மதிப்பிலான நீர்வள ஆதாரப் பணிகளைத் தொடங்கிவைத்த தமிழக முதல்வர்!!!

தமிழகப் பொதுப்பணித்துறையின் கீழ் பல்வேறு நீர்வள ஆதாரப்பணித் திட்டங்களுக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியிருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் உதவியால் பிளஸ் 1 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி: குவியும் வாழ்த்துக்கள்!

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கஷ்டப்படும்போது மக்களுக்கு உதவி செய்வதில் வட இந்தியாவில் ஒரு சோனு சூட் என்றால் தென்னிந்தியாவில் ராகவா லாரன்ஸ் என்று சொல்லலாம்.

'முள்ளும் மலரும்' தர்ஷா குப்தாவின் கிளுகிளுப்பான போட்டோஷூட்!

இந்த கொரோனா கால விடுமுறையில் பிரபல நடிகர், நடிகைகள் பலர் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்

தாங்கி பிடிக்க தயங்க வேண்டாம்: முதல்வர் பழனிசாமிக்கு வைரமுத்து வேண்டுகோள்

சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.