இளம் வயதில் உயிரிழந்த ரசிகர்.. நேரில் சென்று அஞ்சலி செய்த கார்த்தி!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தின் நிர்வாகி ஒருவர் இளம் வயதில் மரணமடைந்ததை அடுத்து அவரது வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
தமிழ் திரை உலகின் முக்கிய நடிகர்களில் ஒருவர் கார்த்தி என்பதும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் ரசிகர் மன்றத்தின் தென்சென்னை மாவட்ட நிர்வாகியாக பதவி வகித்த 29 வயது வினோத் என்பவர் திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நடிகர் கார்த்தி சென்னை திருவான்மியூரில் உள்ள வினோத் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் வினோத்தின் குடும்பத்தினரை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்து சில நாட்களுக்கு முன்னால் நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் நாமக்கல்லில் மரணமடைந்த போது சூர்யா அவரது வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிட குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.