close
Choose your channels

இயக்குனராக மாறிய தமிழ் நடிகர்

Wednesday, December 11, 2019 • தமிழ் Comments

நடிகர்கள் இயக்குனராவதும், இயக்குனர்கள் நடிகராவதும் தமிழ் சினிமாவில் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வாக இருந்து வரும் நிலையில் இன்னொரு தமிழ் நடிகர் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

மணிரத்னம் இயக்கிய ‘அலைபாயுதே’ படத்தில் அறிமுகமான நடிகர் கார்த்திக் குமார், அதன் பின்னர் பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் என்பதும், சமீபத்தில் கூட அவர் ’தேவராட்டம்’ படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் மட்டுமின்றி கார்த்திக் குமார் ஒரு சிறந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கார்த்திக் குமார் இயக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பாக்யராஜ், மனோபாலா, உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தின் டைட்டில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் இந்த படத்தை யூட்லி பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருவதாகவும் தெரிகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே கருப்புதுரை’ என்ற படத்தை தயாரித்துள்ளது என்பது இந்தப்படம் இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாத்தா பேரன் உறவை வலுப்படுத்தும் கதையைத்தான் கார்த்திக் குமார் தனது முதல் படத்தில் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz