நடிகர் சங்க பதவியை ராஜினாமா செய்வேன். கருணாஸ்

  • IndiaGlitz, [Sunday,July 03 2016]

சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் துணைத்தலைவர் பதவியில் வெற்றி பெற்ற கருணாஸ், திருவாடனை சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் தேர்வு செய்யபட்டார். அதுமட்டுமின்றி தனுஷின் 'கொடி', சந்தானத்தின் 'தில்லுக்கு துட்டு' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள அவர், தனுஷின் 'வடசென்னை' படத்திலும் நடித்து பிசியான நடிகராகவும் விளங்கி வருகிறார்
இந்நிலையில் எம்.எல்.ஏ பணிகளும், பட வாய்ப்புகளும் எதிர்காலத்தில் அதிகமானால் தனது நடிகர் சங்க பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்' என்று பேட்டி ஒன்றில் கருணாஸ் கூறியுள்ளார்.
நடிகர் சங்கத்தின் புதிய பொறுப்பை ஏற்றதும் நிர்வாகிகள் அனைவரும் நலிந்த நடிகர்களின் பட்டியலை தேடி எடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ததாகவும், மேலும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கான பணிகளில் மூழ்கி இருந்ததாகவும் கூறிய அவர் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறினார்.

More News

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படத்தில் ரஜினி-விஜய் வில்லன்

ஜூராஸிக் பார்க்' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கியுள்ள 'The BFG' ...

தனுஷ்-கவுதம்மேனன் படத்தின் கதை இதுதான்.

தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது...

இன்று மாலை 'ரெமோ' தரும் சர்ப்ரைஸ்

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஹாலிவுட் மேக்கப் கலைஞர்களின்...

விஷாலின் அடுத்த படத்தில் சிம்பு நாயகி

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'சண்டக்கோழி 2' திரைப்படம் விரைவில் தொடங்கவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

திருட்டு டிவிடி பிரச்சனை : விஷாலின் மேலும் ஒரு அதிரடி நடவடிக்கை

கடந்த சில வருடங்களாக திருட்டு டிவிடி பிரச்சனை திரையுலகினர்களுக்கு தீராத தலைவலியாக இருந்து வருகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளோடு திரையுலகினரும்...