தமிழக முதல்வரை சந்தித்த ஆக்சன்கிங் அர்ஜூன்!

தமிழக முதல்வராக சமீபத்தில் முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின்னர் அவரை மரியாதை நிமித்தமாக பலர் சந்தித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். பிரபல அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், திரை உலக பிரபலங்கள் தினந்தோறும் அவரை மரியாதை நிமித்தமாக பலர் சந்தித்து வருகின்றனர்

இந்த நிலையில் ஆக்சன்கிங் அர்ஜுன் அவர்கள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

முக ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களுடன் ஆக்சன் கிங் அர்ஜுன் இருக்கும் இந்த புகைப்படத்தை அர்ஜூன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,.

ஆக்சன்கிங் அர்ஜூன் தற்போது ‘மேதாவி’ மற்றும் ‘ஃப்ரெண்ட்ஷிப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.