close
Choose your channels

நடிகர் கிங்காங் மகனா இவர்? வைரல் புகைப்படம்

Wednesday, June 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் கிங்காங் என்பதும் பாண்டியராஜன் இயக்கிய ’நெத்தியடி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதன்பின் ’அதிசயபிறவி’, ‘கிழக்கு கரை’ ‘சின்ன ஜமீன்’, ‘கட்டப்பஞ்சாயத்து’ ‘போக்கிரி’ உள்பட பல திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் கிங்காங் தனது மகனின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து இன்று தனது மகன் துரைமுருகன் பிறந்தநாள் என்றும் அவருக்கு தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கிங்காங் மகன் துரைமுருகனுக்கு ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கிங்காங் தனது மகனின் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிங்காங் மகனா இவர்? என்று ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.