முதல்முறையாக பொதுமீடியாவில் தலைகாட்டிய குமரிமுத்து மகள்: வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Friday,July 10 2020]

பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவை அனைவரும் அறிந்தது உண்டு. ஆனால் அவரது குடும்பம் குறித்து இதுவரை யாரும் அறிந்ததில்லை. இந்த நிலையில் முதல் முறையாக குமரிமுத்துவின் மகள் சமூக வலைதளம் மூலம் தன்னை அறிமுகம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

குமரிமுத்து மகளாகிய எனது பெயர் எலிசபெத். இதுவரை நான் பொது மீடியாவுக்கு வந்ததில்லை. முதல் முறையாக வந்து ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எல்லோருக்கும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசை எல்லோருக்கும் நிறைவேறுவதில்லை. ஆனால் எல்லோரும் வெற்றி பெறலாம் அதற்கு என்ன செய்யலாம் என்பதை என்னுடைய அனுபவங்கள் மற்றும் என்னுடைய தகப்பனார் அனுபவங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் வாழ்க்கையில் வெற்றி பெற முதலில் நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு சின்ன விஷயம் அமைதி. எவ்வளவுக்கெவ்வளவு நாம் வாழ்க்கையில் அமைதியாக இருக்கின்றோமோ, அமைதியை கடைப் பிடிக்கின்றோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நாம் வெற்றி பெறலாம் என்று எலிசபெத் குமரிமுத்து கூறியுள்ளார். மேலும் மீண்டும் அடுத்தடுத்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குமரிமுத்து மகள் எலிசபெத்தின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
 

More News

அரசை மட்டும் குறைகூற வேண்டாம், நமக்கும் பொறுப்பு வேணும்: பிரபல தமிழ் நடிகை

பிரபல நடிகையும் சேவ் சக்தி என்ற அமைப்பு மூலம் சமூக சேவை செய்து வருபவருமான நடிகை வரலட்சுமி, கொரோனா விஷயத்தில் அரசை மட்டும் குறை கூற வேண்டாம்

கொரோனா பாதித்தவருக்கு அறிகுறியே இல்லைனாலும் பெரிய பிரச்சனைதான்!!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!!

இந்தியா போன்ற சில நாடுகளில் கொரோனா பாதிப்பு பெரும்பாலானவருக்கு அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை என்ற செய்தி மிகவும் வரவேற்கத்தக்கதாகப் பார்க்கப்பட்டது.

பிரபாஸ் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்-பர்ஸ்ட்லுக் ரிலீஸ்

பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் நடித்த அடுத்த திரைப்படமான 'சாஹோ' எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை

இந்தியாவில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடி: இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா???

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி

சோறு போடாத மனைவியை பழிவாங்க முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை நபரால் பரபரப்பு

சோறு போடாத மனைவியை பழிவாங்க தமிழக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை நபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது