close
Choose your channels

பிரபல நடிகை மகளின் வேற லெவல் டிரான்ஸ்பர்மேஷன்… வைரல் புகைப்படம்!

Monday, January 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. அந்த அளவிற்கு அழகும் திறமையும் வாய்ந்தவர். தமிழ், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் கலக்கிய இவர் இன்றும் தொடர்ந்து திரைப்படம், சின்னத்திரை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனப் படு பிசியாக இருக்கிறார். அதேபோல அரசியலிலும் முக்கிய பிரமுகராக அறியப்பட்டு வருகிறார். ஆனால் சுந்தர்.சி-குஷ்பு தம்பதியின் 2 மகள்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அவ்வபோது சர்ச்சை கருத்துகள் எழுகின்றன.

காரணம் நடிகை குஷ்புவை போல இல்லாமல் இவரது இரு மகள்களும் மிகக் குண்டாக இருக்கின்றனர் எனச் சில ரசிகர்களே கிண்டலடித்து வந்தனர். இந்நிலையில் நடிகை குஷ்பு தற்போது அவரது இரண்டாவது மகள் அனந்திதாவின் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில் அவரின் வேற லெவல் டிரான்ஸ்பர்பேஷன் தெரிகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அந்தப் புகைப்படத்தை லைக் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

நடிகை குஷ்பு தன்னுடைய மகள் அனந்திதாவின் பிறந்தநாளில், “ஒரு மூட்டை மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் ஏற்பட்டு இருக்கிறது. பெயருக்கு ஏற்றாற்போல எங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியை கொண்டு வருகிறாய். உன்னால் ஒவ்வொரு கணத்திலும் மகிழ்ச்சி பொங்கி வழிகிறது. ஐ லவ் யூ என் பொம்மை குட்டி” எனப் பதிவிட்டு, அதில் சில புகைப்படங்களை இணைத்து உள்ளார். அந்த புகைப்படத்தில் அனந்திதா படு ஒல்லியாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் வேற லெவல் டிரான்ஸ்பர்மேஷன் என ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு லைக் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.