close
Choose your channels

கொரோனாவில் இருந்து மீண்டது பிரபல தமிழ் நடிகரின் குடும்பம்: உருக்கமான டுவீட்!

Sunday, April 11, 2021 • தமிழ் Comments

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் நடிகர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதனை அடுத்து அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் டுவிட் ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் மாதவன் பதிவு செய்திருந்தார். இதனையடுத்து அவரும் அவருடைய குடும்பத்தினர்களும் விரைவில் குணமாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள மற்றொரு ட்வீட்டில் நானும் எனது அம்மா உள்பட எனது குடும்பத்தினர் அனைவருக்கும் தற்போது கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதனை அடுத்து நாங்கள் வீடு திரும்பியுள்ளோம். இருந்தாலும் மருத்துவரின் அறிவுரைப்படி ஒரே ஒரு சில நாட்கள் நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக இருக்க முடிவு செய்துள்ளோம். கடவுள் அருளால் நாங்கள் அனைவரும் தற்போது நலமாக இருக்கிறோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

நடிகர் மாதவன் நடித்த ’ராக்கெட்டரி’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz