நடிகர் மாதவனின் அடுத்த படத்தை இயக்குவது இந்த பிரபலமா?

  • IndiaGlitz, [Friday,December 17 2021]

நடிகர் மாதவனின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை முன்னணி நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவர் மாதவன் என்பதும் இவர் தற்போது ’ராக்கெட்டரி’ என்ற தமிழ் திரைப்படத்திலும் 2 ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ’ராக்கெட்டரி’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மாதவன் நடிக்கும் அடுத்த படத்தை ’ஈரம்’ இயக்குனர் அறிவழகன் இயக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படம் குறித்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் அறிவழகன் தற்போது அருண்விஜய் நடித்துவரும் ’பார்டர்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின் இறுதிகட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'வலிமை' தயாரிப்பாளர் போனிகபூரா இவர்? 45 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்!

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் என்பதும் இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் தனது இன்ஸ்டாகிராம்

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்: ஆச்சரிய தகவல்!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து

'பீஸ்ட்' புரமோ படப்பிடிப்பில் விஜய்யுடன் கலந்து கொண்ட பிரபலங்கள் யார் யார்?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

டாஸ்குகள் முடிவுக்கு பின் நாமினேஷனில் இருப்பவர்கள் யார் யார்? பிக்பாஸ் அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 75 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் செய்யப்படுவதாகவும் ஆனால் அடுத்தடுத்து நடைபெறும்

திருமணமான ஒரே மாதத்தில் கணவரை பிரிகிறாரா 'செம்பருத்தி' ஷபானா?

'செம்பருத்தி' சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷபானாவுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்த நிலையில் ஒரே மாதத்தில் அவர்கள் பிரிய இருப்பதாக செய்திகள் கசிந்து வருவது பெரும்