நடிகர் மகேஷ்பாபுவின் வீட்டில் நிகழ்ந்த மரணம்.. திரையுலகினர் அஞ்சலி!

பிரபல நடிகர் ஒருவரின் வீட்டில் நிகழ்ந்த மரணம் காரணமாக திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி அவர்கள் காலமானார். இவர் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்த கிருஷ்ணாவின் மனைவி என்பதும் மகேஷ்பாபுவின் அம்மா என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திராதேவி சமீபத்தில் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்றார் என்றும் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவியின் உடல் இன்று காலை 9 மணிக்கு பத்மாலயா ஸ்டூடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகேஷ்பாபு தாயார் மரணம் குறித்து தகவல் அறிந்த தெலுங்கு திரையுலக பிரபலங்கள் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் கூறி வருகின்றனர். மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்திராதேவி அவர்களின் மறைவு என்னை மிகவும் சோகத்திற்கு உள்ளாக்கியது என்றும் மகேஷ்பாபுவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகர் மகேஷ்பாபு சகோதரர் ரமேஷ் பாபு கடந்த ஜனவரி மாதம் காலமான நிலையில் தற்போது அவரது தாயாரும் காலமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய் படத்துடன் மோதும் நடிகரின் படம்!

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் படத்துடன் மோதிய பிரபல நடிகரின் படம் மீண்டும் அடுத்த ஆண்டு விஜய் படத்துடன் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 தொடங்கும் தேதி இதுதான்: விஜய் டிவி அறிவிப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் 6வது சீசன் வரும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

என் அம்மாவும் 'பொன்னியின் செல்வன்' பார்ப்பார்.. ரசிகரின் பதிவுக்கு பதிலளித்த நடிகர்!

 மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

'பொன்னியின் செல்வன்' ஐஸ்வர்யாராய்.. இதற்கு முன் அவர் நடித்த தமிழ் படங்கள் ஒரு பார்வை!

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி ஆகியுள்ளார்

ராஷ்மிகா மந்தனாவுக்கு என்ன ஆச்சு? சிகிச்சை அளித்த டாக்டரின் இன்ஸ்டாகிராம் பதிவு!

 தமிழ், தெலுங்கு, பாலிவுட் என பான் - இந்திய நடிகையாக உருவாகியுள்ள ராஷ்மிகா மந்தனாவுக்கு திடீரென முழங்கால் வலி ஏற்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம்