close
Choose your channels

சின்ன வயதில் நடிகர் மனோபாலா எப்படி இருக்கின்றார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

Saturday, June 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் போன்ற அவதாரங்களில் ஜொலித்து வரும் மனோபாலாவின் இளமைக்கால புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் நடித்த ’ஊர்காவலன்’, விஜயகாந்த் நடித்த சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், கருப்பு நிலா உள்பட சுமார் 20 க்கும் மேலான திரைப்படங்களை இயக்கி உள்ளவர் மனோபாலா. மேலும் இவர் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பதும், ’சதுரங்க வேட்டை’ ’பாம்பு சட்டை’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக டுவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் மனோபாலா சற்று முன்னர் தனது இளமைக்கால புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் நீண்ட தலைமுடியுடன் இப்போது உள்ளது போன்றே ஒல்லியான உடலமைப்புடன், கண்ணாடியுடன் காணப்படுகிறார். கருப்பு வெள்ளையில் உள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.