மிர்ச்சி சிவாவுக்கு கிடைத்த புரமோஷன்

  • IndiaGlitz, [Thursday,July 25 2019]

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 600028' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'தமிழ்ப்படம்', ''கலகலப்பு', 'தில்லுமுல்லு', 'உள்பட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் மிர்ச்சி சிவா. இவருக்கும் பேட்மிண்டன் வீராங்கனை பிரியாவுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தல அஜித், மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டார். பிரியாவும் ஷாலினியும் இணைந்து இரட்டையர்களாக பேட்மிண்டன் விளையாட்டில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மிர்ச்சி சிவா மனைவி பிரியா சமீபத்தில் கர்ப்பமான நிலையில் இன்று அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக சிவாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நடிகர் சிவா, தந்தை என்ற புரமோஷனை பெற்றுள்ள நிலையில் அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது மிர்ச்சி சிவா, வெங்கட்பிரபு இயக்கியுள்ள 'பார்ட்டி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் அவர் தற்போது 'வணக்கம் சுமோ' என்ற படத்தில் நடித்து வருகிறார்