close
Choose your channels

தமிழக முதல்வரிடம் முக்கிய கோரிக்கை வைத்த மோகனின் 'ஹரா' படக்குழுவினர்

Saturday, May 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 80-90களில் ’பயணங்கள் முடிவதில்லை’ ’இளமை காலங்கள்’ ’மௌனராகம்’ உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகர் மோகன் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் ’ஹரா’ என்ற திரைப்படத்தில் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். விஜய்ஸ்ரீ இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் தந்தை மகள் சென்டிமென்ட் கொண்ட படம் என்றும் பெண் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்ற ஒரு சாதாரண மனிதனின் கோபம் தான் இந்த படத்தின் மையப் புள்ளி என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஹரா’ படக்குழுவினர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். பெண்களுக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே ஸ்பெயின் நாட்டில் இது போன்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகமும் மூன்று நாட்கள் விடுமுறை அளித்து நாட்டிற்கே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

’ஹரா’ படத்தில் மோகன் தனது மகளுக்காக மூன்று நாட்கள் பள்ளி நிர்வாகத்திடம் விடுமுறை கேட்கும் காட்சி இருப்பதை அடுத்து இந்த கோரிக்கையை தமிழக முதல்வரிடம் வைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் நிச்சயம் பரிசீலனை செய்வார் என்று நம்புகிறோம் என்றும்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பழம்பெரும் நடிகர் சாருஹாசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ’ஹரா’ படத்தில் மோகன் ஜோடியாக குஷ்பு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos