பேயாக நடிக்கும் பேயை ஓட்டிய நடிகர்

  • IndiaGlitz, [Sunday,July 12 2015]

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'டார்லிங்' படத்தில் பேய் ஓட்டுபவராக கலக்கலான நடிப்பை கொடுத்து பெரும் பாராட்டுக்களை பெற்ற 'நான் கடவுள்' ராஜேந்திரன், தற்போது இன்னொரு படத்தில் பேயாகவே நடிக்கின்றார்.

'நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் மூலம் வெற்றிகரமாக ரீ எண்ட்ரி ஆன சிபிராஜ், அடுத்து நடிக்கவிருக்கும் திரைப்படம் 'ஜாக்சன் துரை' இந்த படத்தில் சிபிராஜ் பேய்களை அடக்குபவராக நடித்துள்ளார்.

ஒரு கிராமத்தில் அட்டகாசம் செய்யும் இரண்டு பேய்களை எப்படி சிபிராஜ் அடக்குகிறார் என்பதுதான் கதை. சத்யராஜ் மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் ஆகிய இரண்டு பேர்களும் பேய்களாக நடித்துள்ளனர். இந்த படத்தில் ராஜேந்திரன் தனக்கு இணையாக நடித்திருப்பதாகவும், அவருடைய நடிப்பை சத்யராஜே வியந்து பாராட்டியதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீஸானது. சத்யராஜ், ராஜேந்திரன் ஆகிய இருவரும் மிரட்டும்படியாக அந்த பர்ஸ்ட் லுக்கில் தோற்றமளிக்கின்றனர்.

இந்த படத்தை ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன் நிறுவனம் தயாரிக்க தரணிதரன் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே 'பர்மா' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரே நாளில் ரிலீஸாகும் சமந்தாவின் இரண்டு படங்கள்

விக்ரம் நடித்து வந்த '10 எண்றதுக்குள்ள' படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் அந்த படத்தின் கிளைமாக்ஸின் முந்தைய...

பாம்புச்சட்டை படப்பிடிப்பு முடிந்தது.

90களில் இயக்குனராகவும், தற்போது நகைச்சுவை நடிகராகவும் விளங்கிவரும் மனோபாலா, முதன்முதலில் தயாரித்த...

மீண்டு வா நண்பா.. நண்பரின் உடல்நலத்திற்கு பிரார்த்தனை செய்த கேப்டன்

கேப்டன் விஜயகாந்த் நடித்த கருப்பு நிலா, சக்கரைத்தேவன், தாய் மொழி, பரதன் போன்ற பல படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளரும் விஜயகாந்த்...

விஜய்யுடன் மீண்டும் இணைகிறாரா குஷியான இயக்குனர்?

புலி படத்தில் நடித்து முடித்துவிட்ட விஜய் கடந்த 1ஆம் தேதி முதல் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'விஜய் 59' படத்தில் நடித்து வருகிறார்...

முதல் நாளில் ரூ.60 கோடி அள்ளிய பாகுபலி?

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, ரம்யாகிருஷ்ணன், நாசர், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் நேற்று பிரமாண்டமான ரிலீஸான 'பாகுபலி'...