பிரபல நடிகரின் 2வது மனைவி அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ்: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Wednesday,July 28 2021]

பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் ஒருவரின் இரண்டாவது மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் வெளியான ’மனைவி ஒரு மாணிக்கம்’ ’ஜாதிமல்லி’ ’ஐந்தாம்படை’ ’பொன்னர் சங்கர்’ உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகர் முகேஷ். இவர் நடிகை சரிதாவை கடந்த 1988ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருந்த நிலையில் முகேஷ் சரிதாவை 2011ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

அதன்பின்னர் தேவிகா என்பவரை 2013ஆம் ஆண்டு முகேஷ் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது தேவிகா தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்து வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனது கணவர் குறித்து தான் எந்தவித குடும்ப வன்முறை குற்றச்சாட்டும் கூறப் போவதில்லை என்றும் அவரை திருமணம் செய்து எட்டு ஆண்டுகள் ஆன பின்னும் அவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் அவரை விட்டு பிரிய முடிவு செய்தேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் முகேஷ் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை என்றும் அவருடைய திரையுலக மற்றும் அரசியல் வாழ்க்கையில் குடும்ப பிரச்சனைகளை இணைப்பதுதான் பிரச்சனைக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் நடிகர் முகேஷ் தற்போது கேரள மாநிலம் கொல்லம் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிகினி உடையால் ஒலிம்பிக் போட்டியில் வெடித்த சர்ச்சை!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் போட்டிக்காக தங்களுக்கு

"நடிப்பின் இலக்கணம்" தனுஷ்-ற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!

தமிழ் சினிமா முதல் பாலிவுட் வரை தன்னுடைய உழைப்பால் நடிப்பில் கொடி கட்டிப்பறக்கும் நடிகர் என்றால் அது தனுஷ் தான். ஜூலை-28-ஆன இன்று தனுஷ் தன்னுடைய 38-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

தமிழகத்தில் பள்ளி திறப்பு குறித்து மருத்துவக்குழு முக்கியப் பரிந்துரை!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பெருமளவிற்கு தணிந்து இருக்கிறது.

இந்திய நகரத்துக்கு யுனெஸ்கோ சிறப்பு அந்தஸ்து…. அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?

ஐ.நா.வின் காலச்சார அமைப்பான யுனெஸ்கோ குஜராத் பகுதியில் உள்ள “தோலவிரா“ எனும் நகரத்திற்கு சிறப்பு

ஆன்லைன் அலப்பறைகள்… கற்றலைவிட சாட்டிங்கே அதிகம் நடப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட்!

கொரோனா காரணமாக இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் கடந்த ஒன்றரை வருடமாக