close
Choose your channels

இயக்குனர் குடும்பத்திற்கு வரும் பிரபல நடிகரை வரவேற்ற ஏ.ஆர்.முருகதாஸ்!

Saturday, July 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் நடிகர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள் ஆகியோர் இயக்குனர்களாக கடந்த சில ஆண்டுகளில் மாறி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகி உள்ளார். இதனையடுத்து அவரை பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் வரவேற்றுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகர், இசையமைப்பாளர் என்று இரண்டு துறைகளிலும் ஜொலித்து வரும் விஜய் ஆண்டனி, ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலம் இயக்குனராகி உள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பது மட்டுமின்றி இந்த படத்தை அவரே தயாரித்து இசையமைத்து இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்று முன் பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் வெளியிட்டு இயக்குனர் குடும்பத்திற்கு வரும் விஜய் ஆண்டனியை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ’பிச்சைக்காரன் 2’ படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என்றும் அவர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். ஏஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ள ’பிச்சைக்காரன் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos