close
Choose your channels

மீண்டும் பாடகராக மாறிய தமிழ் ஹீரோ: வைரல் புகைப்படம்!

Sunday, March 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் இளம் ஹீரோக்களில் ஒருவர் நகுல் என்பதும் இவர் நடிகர் மட்டுமின்றி ஒரு பாடகர் என்பதும் தெரிந்ததே. ஏற்கனவே ’அந்நியன்’ ’கஜினி’ ’வேட்டையாடு விளையாடு’ ’வல்லவன்’ ’கந்தகோட்டை’ உள்பட பல திரைப்படங்களில் இவர் பாடியுள்ளார் என்பதும் கடந்த 2014ஆம் ஆண்டு பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் நடிக்கும் ஒரு திரைப்படத்திலேயே பாடல் ஒன்றை பாடியுள்ளார். Satusan என்பவர் இயக்கி வரும் டைட்டில் வைக்கப்படாத படத்தில் ஹீரோவாக நகுல் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை அவர் பாடியுள்ளார் என்பதும் இந்த பாடல் ஒலிப்பதிவின் போது எடுத்த புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து உள்ளார் என்பதும் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலை இசையமைப்பாளர் அஸ்வத் கம்போஸ் செய்துள்ளார். இந்த படம் குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் இந்த பாடலை பாடியது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது என்றும் ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்ததாகவும் நகுல் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.