நானி சகோதரி இயக்கம்....! ஆந்தாலஜியில் களமிறங்கும் சத்யராஜ்...!

  • IndiaGlitz, [Saturday,August 07 2021]

நடிகர் நானி தயாரிக்கவுள்ள புதிய திரைப்படத்தில், சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஓடிடியில் வெளியாகவுள்ள இந்த ஆந்தாலஜி-யானது தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் நானியின் சகோதரியான தீப்தி கந்தா இயக்குனராக அறிமுகமாக, நானியே இப்படத்தை தயாரிக்கிறார்.

நானியின் வால் போஸ்டர் நிறுவனம் இதற்கு முன் பல திரைப்படங்களை தயாரித்துள்ள நிலையில், தற்சமயம் மீட் க்யூட் என்ற பெயரில் இந்த ஆந்தாலஜியை தயாரிக்கவுள்ளது. இதில் 5 வித்தியாசமான கதைகள் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத சந்திப்புகளையும் மையக் கருத்தாக வைத்து, இத்திரைப்படம் உருவாகவுள்ளது. இதில் சத்யராஜ், ரோகிணி, சுனைனா உள்ளிட்ட 12 முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். இப்படத்தை விஜய் புல்கானி ஒளிப்பதிவு செய்ய, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளில் இருந்து நடிகர்களை தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.