பிரபல நடிகருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்த ஐக்கிய அரபு அமீரகம்!

  • IndiaGlitz, [Thursday,April 21 2022]

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்துவரும் நடிகர் நாசருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், வங்காளம் என்று பன்மொழித் திரைப்படங்களில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகர் நாசர். இவர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக கோல்டன் விசா வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது.

சமீபகாலமாகப் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் மலையாளம், இந்தி போன்ற பல சினிமா பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழில் நடிகர் பார்த்திபன், விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, மீனா போன்றோருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. தற்போது நடிகர் நாசருக்கு இந்த கவுரம் அளிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இவருக்கு டான்ஸ் தெரியுமா? வைரலாகும் ஒலிம்பிக் வீராங்கனையின் அரபிக்குத்து வீடியோ!

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து தளபதி விஜய் நடிப்பில் உருவான “பீஸ்ட்“ திரைப்படத்தின்

300 ரூபாயுடன் வீட்டை விட்டு ஓடி வந்தாரா? ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த கேஜிஎஃப் நடிகர்!

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் “கேஜிஎஃப்2“ திரைப்படம் இந்த மாதம் 14 ஆம் தேதி ரிலீசானது. இந்தத் திரைப்படம்

'கே.ஜி.எஃப்' தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சுதா கொங்காரா: ஆரம்பமே மாஸ் தான்!

'சூரரைப்போற்று' இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்து உள்ளது என்பதும் இந்த படத்தை 'கே.ஜி.எஃப்' மற்றும் 'கேஜிஎப் 2 ' படங்களை தயாரித்த

செம லவ் ஸ்டோரி: 'அன்பிற்கினியாள்' கீர்த்தி பாண்டியனின் அடுத்த படம்!

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகளும் 'அன்பிற்கினியாள்' என்ற திரைப்படத்தின் நாயகியுமான கீர்த்தி பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒரே வாரத்தில் இத்தனை கோடியா? 'ஆர்.ஆர்.ஆர்' வசூலை நெருங்கும் 'கேஜிஎஃப் 2'

இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்'  திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்த நிலையில் அந்த படத்தின் வசூலை 'கேஜிஎப் 2'  திரைப்படம்