இளம் நடிகருக்கு கால் முறிவு… கிண்டல் செய்து பிக்பாஸ் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,July 08 2023]

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்துவரும் நடிகர் ஒருவர் விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு தற்போது வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில் அவரைப் பார்க்க சென்ற பிக்பாஸ் நடிகை கிண்டல் செய்து வெளியிட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் கவனம் பெற்றிருக்கிறது.

தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து வரவேற்பு பெற்றவர் நடிகர் நவதீப். இவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் அதேபோல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். கூடவே பல வெப் தொடர்களில் இவர் நடித்துவருகிறார்.

தெலுங்கில் பிரபலமான இவர் தமிழ் சினிமாவில் ‘அறிந்தும் அறியாமலும்’ திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவிற்கு தம்பியாகவும் நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு மகனாகவும் செம அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதேபோல ‘நெஞ்சில்’, நடிகர் அஜித் நடித்திருந்த ‘ஏகன்’, ‘சொல்ல சொல்ல இனிக்கும்’, ‘சீறு’ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே நன்றாக அறியப்பட்டு இருந்தார்.

தற்போது தெலுங்கில் மட்டுமே அதிக கவனம் செலுத்திவரும் நடிகர் நவதீப் நடிகை சன்னிலியோன் நடிப்பில் இயக்குநர் வடிவுடையான் இயக்கிவரும் ‘வீரமாதேவி’ திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் நவதீப்பிற்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டதாகவும் அப்போது காலில் முறிவு ஏற்பட்டு வீட்டில் ஓய்வில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரைப் பார்க்க சென்ற தெலுங்கு பிக்பாஸ் நடிகை தேஜஸ்வி மடிவாடா நடிகர் நவதீப் சலிப்பாக உட்கார்ந்திருப்பதை கிண்டல் செய்து நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்த பிறகுதான் தெலுங்கு வட்டாரத்தில் நடிகர் நவதீப்பிற்கு காலில் முறிவு ஏற்பட்டு இருப்பதே பலருக்கும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் விரைவில் குணமாகி வரவேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

More News

$100 மில்லியன் பட்ஜெட் படம்.. ஒரு கிராபிக்ஸ் காட்சி கூட இல்லை: ஜூலை 21ல் ரிலீஸ்..!

 100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டு வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகிய 'OPPENHEIMER'  என்ற படத்தில் ஒரு கிராபிக்ஸ்

'ஜெயிலருக்கு அடுத்த படத்தில் 3 உச்ச நட்சத்திரங்கள்.. ஜாக்பாட் அடித்த நெல்சன்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நெல்சன் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ள நிலையில் அதில் தமிழ் திரை உலகின் மூன்று உச்ச நட்சத்திரங்க

பட பூஜையே போடல, அதற்குள் இத்தனை கோடி வியாபாரமா? கமல்-எச் வினோத் படத்தின் சாதனை..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கமல் 233' என்ற படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். இருப்பினும் இந்த படத்தின் பூஜை கூட போடாத

ஒரிஜனலை விட நல்லா இருக்கு.. தமன்னா வெளியிட்ட 'காவாலா' நடன வீடியோ வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற 'காவாலா' என்ற பாடல் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னால் வெளியானது என்பதும் இந்த பாடல் இணையத்தில் 13 மில்லியனுக்கு மேல்

பெரியார், அம்பேத்கர், காமராஜர் குறித்து பேசினால் போதாது: விஜய்க்கு அட்வைஸ் கூறிய அன்புமணி..!

பெரியார், அம்பேத்கர், காமராஜர் குறித்து பேசினால் மட்டும் போதாது என்று என்றும் அவர்களுடைய கொள்கைகளை ஏற்று அதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்றும் நடிகர் விஜய்க்கு  பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்