close
Choose your channels

தனுஷின் வில்லனாக மாறும் ஹீரோ நடிகர்!

Wednesday, March 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அதேபோல் தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் 'எதிர்நீச்சல்', 'காக்கி சட்டை', 'கொடி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தனுஷின் 34வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் குற்றாலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் வில்லனாக நடிக்க நடிகர் நவீன் சந்திரா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு அருண்மோகன் என்பவர் இயக்கிய 'சரபம்' படத்தின் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷ் ஜோடியாக இந்த படத்தில் சினேகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.