பிரபாஸ் திருமணம் எப்போது? குடும்பத்தினர் தெரிவித்த தகவல்!

  • IndiaGlitz, [Thursday,December 26 2019]

'பாகுபலி, பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களுக்குப் பின் நடிகர் பிரபாஸ் நடித்த ’சாஹோ’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால், மீண்டும் ஒரு வெற்றியைப் பெறவேண்டும் என்பதற்காக அவர் தற்போது ’ஜான்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் கடந்த 1970 ஆம் ஆண்டில் நடந்த ஒரு காதல் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சாஹோ’ திரைப்படம் வெளியான பின்னர் பிரபாஸ் திருமணம் நடைபெறும் என்றும் பிரபாசை திருமணம் செய்து கொள்ளும் பெண் இவர்தான் என்றும் ஒருசில வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் ’சாஹோ’ ரிலீசாகி சில மாதங்களாக ஆனபின்னரும் இன்னும் அவரது திருமணம் குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை.

இந்தநிலையில் பிரபாஸின் நெருங்கிய உறவினர் அளித்த பேட்டி ஒன்றில் ’பிரபாஸுக்கு பொருத்தமான பெண்ணை தேடி வருகிறோம் என்றும் தங்களுடைய குடும்பம் மிகப்பெரியது என்பதால் தங்கள் குடும்பத்துடன் இணையும் மனநிலையில் உள்ள பொருத்தமான பெண்ணை தேடி வருவதாகவும் விரைவில் அவருக்கு பொருத்தமான பெண்ணை கண்டுபிடித்து விடுவோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பிரபாஸ் திருமணம் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் வதந்திகளை படித்து எங்கள் குடும்பத்தினர் சிரிப்போம் என்றும் அவை அனைத்துமே உண்மையாகவே வதந்திதான் என்றும் கூறினார்.

இந்த நிலையில் ஜான் திரைப்படம் ரிலீஸ் ஆனவுடன் தான் பிரபாஸ் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் ராதா கிருஷ்ணாகுமார் இயக்க உள்ளார் என்பதும் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.