கொரோனாவுக்கு பலியான தமிழ் நடிகர்-தயாரிப்பாளர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

  • IndiaGlitz, [Saturday,May 29 2021]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து காலமாகி வருவது திரையுலகினர்க்ளை மட்டுமின்றி ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இயக்குனர்கள் எஸ்பி ஜனநாதன், கேவி ஆனந்த், தாமிரா மற்றும் நடிகர் நிதிஷ் உள்பட ஒருசிலர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு திரை உலக பிரபலம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நடிகர், தயாரிப்பாளர், சினிமா விமர்சகர் மற்றும் யூடியூப் பிரபலமுமான வெங்கட் சுபா என்பவர் சற்றுமுன் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வெங்கட் சுபா உயிரிழந்த தகவலை நடிகரும் இயக்குனருமான மனோபாலா தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் சுபா அவர்களின் மறைவை அடுத்து திரையுலக பிரபலங்கள் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

More News

ஒரு குடும்பத்தில் 6 பேரை காவு வாங்கிய கொரோனா...! மனதை உருக்கும் சோக நிகழ்வு.....!

திருப்பூரில் தன் நான்கு மகன்கள் இறந்ததை கேட்டு, அவர்களின் தாயும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பசிக்கிறதா எடுத்துச் சாப்பிடுங்க… போர்ட் வைத்து மனிதநேயத்தை காட்டிய அதிசய மனிதர்!

கொரோனா பீதிக்கு இடையில் ஒரு மனிதர் “பசிக்கிறதா எடுத்துச் சாப்பிடுங்க…

மேலும் ஒரு வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மீண்டும் ஒருவாரம் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின்

வைரமுத்துவிற்கு விருது...கிளம்பிய சர்ச்சை...! மறுபரிசீலனை செய்ய ஓ.என்.வி., அகாடமி முடிவு ....!

கேரளாவில் இருந்து கவிஞர் வைரமுத்துவிற்கு வழங்கப்போகும் விருது குறித்து பரிசீலனை செய்ய, ஓ.என்.வி., கலாச்சார அகாடமி முடிவெடுத்துள்ளது.

மதுவந்தி மகன் PBSS பள்ளியில் படிக்கவில்லையா? நெட்டிசன்கள் பகிர்ந்த புகைப்படங்கள்!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அந்த பள்ளியின் ஆசிரியர் இராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த